tech

  • on Wednesday, December 9, 2015
  • உங்களிடம் திடீரென்று யாராவது நமது ஊரில் உள்ள நல்லவர்கள் நேர்மையானவர்கள் சமூகப்பற்றுள்ளவர்கள் என்று 5 பேர் சொல்லுங்கள் என்றால் என்ன செய்வோம்

    எமது அனுமானம் சரியாக இருந்தால் பலர் சட்டென்று கூறிக்கொள்ள மாட்டோம் ஆனால் அதே கேள்வியை மறுதலையாகக் கேட்டால் 10 பேரை நொடியினில் சொல்லிவிட்டு இன்னும் ஐந்துபேரை விட்டுவிட்டேனே என்று கவலைப்படுவோம்.

    எம்மிடம் நல்ல தன்மையூள்ளவர்களே இல்லையா? அப்படியல்ல நாம் நல்லதைத் தேடாததுதான் காரணம்

    சமூகத்தில் நல்லவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று நீங்களும் நானும் குறைபடுவது உண்மைதான் குறைவடையக் காரணமாக இருந்துவிட்டு குறைபடுவதுதான் குறைபாடே!

    எத்தனையோ நேர்மையானவர்கள் சமூகப்பற்றுள்ளவர்கள் சாதனையாளர்கள் இருந்திருப்பார்கள். தனது கடமையைச் சரிவரச் செய்தவர்கள் இருந்திருப்பார்கள் நேர்மையாக இருந்ததாலே வாழ்க்கை வசதிகளை
    இழந்தவர்கள் இருந்திருப்பார்கள். அப்படியானவர்களுக்கு சமூகம் காசு பணத்தைத் வழங்கத் தேவையில்லை. சின்னப் பாராட்டுப் போதும். அவர்களுக்கு அது ஒரு ஊக்கமருந்து அவர்களை மேலும் சமூகத்துக்கு உழைக்க வைத்திருக்கும். மேலும் பலரை அவர்கள் வழி நடக்கச் செய்திருக்கும்.

    நாம் எதைத் தேடுகின்றௌமோ அதுவே கிடைக்கும். நாம் நல்லவற்றைத் தேடுவோம்! பாராட்டுவோம்! ஊக்கமளிப்போம். வெளிப்படுத்துவோம்..

    இந்த அணுகுமுறை நம் சமூகத்திற்கு நல் விளைவை ஏற்படுத்தும் என நம்புவதால் ஊக்குவிப்பை பிரதானமாக கருதி ஊக்குவிக்கும் தகவல்களோடு நாம் படித்ததில் இதனை மற்றவர்களும் படித்தால் நல்லது என்று நினைக்கும் தகவல்களையூம் சேர்த்துக் கொண்டு வொய்ஸ் மீண்டும்; வெளிவருகின்றது.

    0 comments:

    Post a Comment